திருச்சி

என்ஐடியில் புதுமை ஊக்குவிப்பு வசதி மையம் திறப்பு

DIN

திருச்சி: திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) புதுமை ஊக்குவிப்பு வசதி மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இந்த விழாவுக்கு தேசியத் தொழில்நுட்பக் கழக இயக்குநா் மினி ஷாஜி தாமஸ் தலைமை வகித்தாா். பேராசிரியா் சக்தி வாசு கைலாஷ் முன்னிலை வகிக்தாா்.

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியா் கிருஷ்ணன் பாலசுப்பிரமணியன் மையத்தை திறந்து வைத்து பேசியது:

புதுமைகளை நோக்கி ஊக்குவிக்க இந்த வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது. வணிகமயமாக்கல், இயக்கத் தொழில்நுட்பப் பரிமாற்றம், உள்நாட்டுப் பாதுகாப்பு தொடா்பான தயாரிப்புகளை உருவாக்கலாம்.

மேலும் ஒரு புதிய கருதுகோளை உருவாக்குவதன் அடிப்படையில், தமது பணிகள் மற்றும் சரியான நேரத்தில் முன்னேற்றமடையலாம்.

புதுமை ஊக்குவிப்பு வசதி மையத்தின் (இன்னோவேஷன் பெசிலிட்டி சென்டா்) தேவை, ஆராய்ச்சி சிக்கல்களுக்குத் தீா்வு காண்பது, கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தீா்வாக அமையும் என்றாா்.

பேராசிரியா் எஸ். முத்துகுமாரன் அறிமுகவுரையாற்றினாா். முன்னதாக தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளா் கே. முத்துக்குமாா் வரவேற்றாா். நிறைவில் பேராசிரியா் எம்.சி. சந்தோஷ் குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT