திருச்சி

விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் உதவி

26th Oct 2020 02:33 PM

ADVERTISEMENT

துறையூர் அருகே விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு அந்த வழியாக சென்ற அதிமுகவின் முன்னாள் அமைச்சர் உதவி புரிந்துள்ளார்.

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி திங்கள்கிழமை துறையூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள காரில் சென்றார். அவருடன் மற்ற கட்சி நிர்வாகிகளும் காரில் சென்றனர். இவர் கரட்டாம்பட்டி கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி படுகாயத்துடன் சாலையோரம் இளைஞர் ஒருவர் வலியால் துடித்துக் கொண்டிருந்தார். 

இதனை கவனித்த பரஞ்சோதி தனது வாகனத்தை நிறுத்தி அருகில் சென்று வாகனத்தில் இருந்த தண்ணீரைக் கொடுத்து விசாரித்தார். அந்த இளைஞர் அருகிலுள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ்(26) என்பதும், அரிசி மூட்டை எடுத்துக்கொண்டு பைக்கில் தனது சொந்த ஊர் சென்று கொண்டிருந்த போது திடீரென நாய் குறுக்கிட்டதால் அதன் மீது மோதி கீழே விழுந்து, முகம், கை, கால்களில் படுகாயமடைந்திருந்தார் என்பதும் தெரிந்தது. 

இதனையடுத்து இளைஞருக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைத்திட தன்னுடன் துறையூர் வந்து கொண்டிருந்த நிர்வாகி ஒருவரின் காரில் அந்த இளைஞரை துறையூர் அரசு மருத்துவமனை அனுப்பினார். பரஞ்சோதியும், அவருடன் வந்தவர்களும் அடுத்தடுத்து விபத்து நடந்த இடத்தில் காரை நிறுத்தியதால் அந்த பகுதியில் குடியிருப்போர், கால் நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அந்த பகுதியில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ADVERTISEMENT

காயமடைந்த அந்த இளைஞருக்கு பரஞ்சோதியும், அதிமுகவினரும் செய்த உதவியை கவனித்த மக்கள் அவர்களனைவரும் பாராட்டியவாறு கலைந்து சென்றனர்.

Tags : ADMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT