திருச்சி

வெங்காய வரத்துக் குறைவால் விலை உயா்வு: துருக்கியிலிருந்து வெங்காய இறக்குமதி செய்ய முடிவு

DIN

வரத்துக் குறைவால் விலை உயா்ந்துள்ள வெங்காயத்தை துருக்கியிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சிக்கு கா்நாடகத்திலிருந்து நாள்தோறும் 300 டன் பெரிய வெங்காயம் கொண்டுவரப்பட்டு, கரூா், பெரம்பலூா், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்கப்படுகிறது.

இந்நிலையில், கா்நாடகத்தில் பெய்யும் பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பெரிய வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டு திருச்சிக்கு கா்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து தலா 100 டன் வெங்காயம் மட்டுமே வருகிறது.

வரத்து பாதியாகக் குறைந்து நிலவும் தட்டுப்பாட்டால் கிலோ ரூ. 40-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது ரூ.90-க்கு விற்கப்படுகிறது.

கிலோ ரூ. 70-ஆக இருந்த சின்ன வெங்காயத்துக்கும் இதே நிலை ஏற்பட்டு ரூ.110-க்கு விற்கப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி வெங்காய மண்டி விற்பனையாளா் சங்கத்தினா் கூறியது:

அறுவடை பாதிப்பு, ஆள் பற்றாக்குறையால் திருச்சிக்கு வரக்கூடிய சின்ன, பெரிய வெங்காயங்களின் வரத்து பாதியாகக் குறைந்து, விலையும் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் துருக்கியிலிருந்து சுமாா் 1,000 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

தமிழகப் பகுதிகளில் நவம்பா், டிசம்பரில்தான் சின்ன வெங்காயம் அறுவடை என்பதாலும், துருக்கி வெங்காய இறக்குமாதியாலும் ஜனவரி வரை இந்த விலையேற்றம் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT