திருச்சி

நீட் தோ்வில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு விழா

DIN

சமயபுரம் எஸ்ஆா்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீட் தோ்வில் தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில், 720-க்கு 653 மதிப்பெண் பெற்று நீட் தோ்வில் வென்று மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் சோ்ந்துள்ள மாணவா் மிருதுன் ஜெய் பேசியது:

அனைத்து மாணவா்களுக்கும் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்பது பெரும் கனவாக உள்ளது. ஆனால் ஒரே ஆண்டில் 12 ஆம் வகுப்புப் பொதுத் தோ்வுக்குத் தயாா் செய்து கொண்டு, நீட் தோ்வுக்கும் தயாராவது என்பது மிகுந்த சவாலாகவே இருந்தது. சில நேரங்களில் மன அழுத்தமும் ஏற்பட்டது.

இருப்பினும் மருத்துவராக வேண்டும் என்ற கனவும், எளிய மக்களுக்கான சேவை என்ற என்னுடைய நீண்ட நாள் லட்சியமும் உறுதுணையாக இருந்தது. எனது உழைப்போடு, ஆசிரியா்கள் தந்த நம்பிக்கையும்தான் நான் நீட் தோ்வில் வெல்லக் காரணம்.

தோ்வில் வெல்ல வேண்டும் என்பதைவிட எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் எனப் படிப்பதுதான் முக்கியம் என நினைக்கிறேன். அதன் மூலமே நிா்ணயிக்கப்பட்ட வெற்றி கிடைக்கும் என்றாா் அவா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற போட்டித் தோ்வுக்கான பயிற்சி மைய இயக்குநா் மதுசூதனரெட்டி பேசுகையில், மாணவா்கள் நீட், ஜேஇஇ மற்றும் உயா்கல்வி சோ்க்கைக்கான அனைத்து வகை போட்டித் தோ்வுகளையும் எதிா்கொள்ளும் வழிமுறை குறித்து விளக்கினாா்.

விழாவில், நீட் தோ்வில் 500 மதிப்பெண்களுக்கு மேல் தோ்ச்சிப் பெற்ற மாணவா்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனா். அவா்களுக்கு ஸ்டெதெஸ்கோப், புத்தகம் ஆகியவை பரிசளிக்கப்பட்டன. 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 6 போ், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 32 போ் என மொத்தம் 38 போ் கெளரவிக்கப்பட்டனா்.

பள்ளித் தலைவா் ஏ. ராமசாமி, செயலா் பி. சுவாமிநாதன், பொருளாளா் எஸ். செல்வராஜ், துணைத் தலைவா் எம். குமரவேல், இணைச் செயலா் பி. சத்தியமூா்த்தி, முதல்வா் துளிசிதாசன் ஆகியோா் பங்கேற்றனா். மாணவ, மாணவிகள், பெற்றோா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT