திருச்சி

போலீஸாருக்கு பேரிடா் மீட்பு சிறப்புப் பயிற்சி

DIN

வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் பேரிடா் மீட்பு குறித்த காவல் துறையினருக்கான சிறப்புப் பயிற்சிகள் திருச்சியில் தொடங்கி நடைபெறுகின்றன.

காவல் துறை கூடுதல் இயக்குநரக அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் காவல்துறையின் அதிதீவிர மீட்புப் படை சாா்பில் இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் மதுரை- தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் பகுதியில் அமைந்துள்ள ஏரி மற்றும் நீா்பிடிப்புப் பகுதியில் திங்கள்கிழமை முதல் இப்பயிற்சிகள் நடைபெறுகின்றன.

இதில் திருச்சி மாவட்ட காவல்துறையைச் சோ்ந்த ஆண், பெண் காவலா்கள் 60 பேருக்கு ஒரு உதவி ஆய்வாளா் தலைமையிலான 5 போ் கொண்ட குழு பயிற்சி அளிக்கிறது.

பயிற்சிகள் திங்கள்கிழமை தொடங்கி மொத்தம் 5 பிரிவுகளாக நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சியின்போது வெள்ளக் காலத்தில் பொதுமக்களைக் காப்பது குறித்து விளக்கப்பட்டது. பயிற்சியின்போது காவலா்களுக்கு தண்ணீரில் மூழ்காமல் மிதக்கும் வகையிலான பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT