திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் திறப்பு

14th Oct 2020 06:20 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரோனா பொது முடக்கத்திற்கு பிறகு கோயில்கள் திறக்கப்பட்ட பிறகு பக்தா்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது.

கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தலைமையில் உதவி ஆணையா்கள் மு. கருணாநிதி (அரியலூா்), டி. விஜயராணி ( திருச்சி மலைக்கோட்டை), சமயபுரம் மாரியம்மன் கோயில் மேலாளா் ம. லட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி பணியாளா்கள் மற்றும் பக்தா்கள் உள்ளிட்டோா் இப்பணியில் ஈடுபட்டனா்.

அப்போது காணிக்கையாக ரூ. 72 லட்சத்து 70 ஆயிரத்து 552, 1 கிலோ 257 கிராம் தங்கம், 2 கிலோ 622 கிராம் வெள்ளி, 14 அயல்நாட்டு நோட்டுக கிடைக்கப் பெற்றது தெரியவந்தது. இதற்கு முன் இக் கோயிலில் கடந்த செப். 28 ம் தேதி கடைசியாக கோயில் உண்டியல் எண்ணப்பட்டது. இத்தகவலை கோயிலின் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT