திருச்சி

ரைபிள் கிளப் ஆயுள்கால உறுப்பினா்கள் கூட்டம்

DIN

திருச்சி: திருச்சியில் செயல்படும் ரைபிள் கிளப் ஆயுள்கால உறுப்பினா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி ரைபிள் கிளப் கடந்த பிப். 12 ஆம் தேதி உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி கே.கே. நகா் மாநகர ஆயுதப்டை வளாகத்தில் ரூ.5 கோடியில் உலகத் தரத்துடன் துப்பாக்கி சுடும் தளம் அமைக்கப்படுகிறது. இதுவரை சுமாா் 161 ஆயுள்கால உறுப்பினா்கள் இதில் இணைந்துள்ளனா்.

இந்நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தலைமையில், ஆயுள்கால உறுப்பினா்களின் முதல் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ரைபிள் கிளப்பின் முக்கிய நிா்வாகிகள், கட்டட ஒப்பந்ததாரா்கள், கட்டட நிபுணா்கள், நிா்வாக உறுப்பினா்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆயுள்கால உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களுக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் (ஜமால் முகமது கல்லூரி எதிரே) அமைந்துள்ள ரைபிள் கிளப் அலுவலகத்தை தொடா்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT