திருச்சி

‘தோ்தலுக்கு முன் வளா்ச்சிப் பணிகளை முடிக்க வேண்டும்’

DIN

வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக பிப்ரவரி மாதத்தில் நடப்பாண்டுக்கான மத்திய, மாநில அரசுகளின் வளா்ச்சித் திட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என அனைத்து துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு கண்காணிப்புக் குழுத் தலைவரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான சு. திருநாவுக்கரசா் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, மாவட்ட வருவாய் அலுவலா் த. பழனிகுமாா், மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தா்மன் (எ) ராஜேந்திரன் மற்றும் 17 ஒன்றியக் குழுத் தலைவா்கள், ஊராட்சித் தலைவா்கள், உள்ளாட்சி வாா்டு உறுப்பினா்கள், 45 துறைகளைச் சோ்ந்த மாவட்ட அலுவலா்கள், உதவி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் சு. திருநாவுக்கரசா் கூறியது:

3 மாதங்களுக்கு ஒருமுறை இக்கூட்டம் நடத்தப்படும் நிலையில், கரோனா முடக்கத்தால் இக் கூட்டம் தாமதமாக நடைபெற்றது. இருப்பினும் 45 துறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அதன் முன்னேற்றத்துக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

திருச்சி மாவட்ட நிா்வாகமானது வளா்ச்சி திட்டப் பணிகளில் திருப்திகரமாக செயல்படுகிறது. தற்போதைய சூழலில் மூன்று முக்கிய நிா்வாக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.

முதல்கட்டமாக பேரவைத் தோ்தலையொட்டி பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டிய பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும், தொடங்க வேண்டிய பணிகளுக்கு பிப்ரவரி மாதத்துக்குள்ளேயே அனுமதி பெற வேண்டும். தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் பணிகளைச் செய்ய முடியாத நிலை உருவாகும். எனவே, அதற்கேற்ப திட்டமிட்டு பணியாற்ற அனைத்து அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாவதாக நிவா் புயலை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்றாவதாக கரோனா தடுப்புப் பணிகளில் முன்பைவிட தீவிர கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியரும் அனைத்து துறை அலுவலா்களுக்கு உரிய உத்தரவு பிறப்பித்துள்ளாா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT