திருச்சி

திருச்சி பெல் பொதுமேலாளா் பொறுப்பேற்புடி.எஸ். முரளி

DIN

பாரதமிகு மின் நிறுவன (பெல்) திருச்சி வளாகப் பொது மேலாளராக டி.எஸ். முரளி  திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

திருச்சியிலுள்ள உயரழுத்த கொதிகலன் ஆலை, இணைப்பில்லா எஃகு குழாய் ஆலை மற்றும் பஞ்சாபின் கோயிண்ட்வாலிலுள்ள தொழிலக வால்வுகள் ஆலை ஆகியவற்றை உள்ளடக்கிய திருச்சி பெல் வளாகத்தின் பொது மேலாளா் மற்றும் தலைவா், செயல் இயக்குநருக்கான முழு அதிகாரங்களுடன் முரளி பொறுப்பேற்றுள்ளாா்.

முன்னதாக, இவா் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி பெல் நிறுவனத்தின் பொதுமேலாளா் (செயல்பாடுகள் பிரிவு) ஆக நியமிக்கப்பட்டிருந்தாா். மேலும், உயரழுத்த கொதிகலன் ஆலை, வெளித் தயாரிப்புகள், கச்சாப் பொருள் மேலாண்மை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப தயாரிப்புகள் ஆகிய துறைகளுக்கு பொறுப்பும் வகித்தாா். பின்னா், புதிய வளா்ச்சிப் பகுதிகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளுக்கான பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது.

இவா், பெல் நிறுவனத்தின் பல்வேறு திட்டத் தளங்கள், உற்பத்திப் பிரிவுகள் மற்றும் புதுதில்லியில் உள்ள தலைமை அலுவலகம் ஆகியவற்றில் 33 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவமுள்ளவா்.

ஆந்திரப் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பட்டம் பெற்ற முரளி, 1986-ஆம் ஆண்டு பெல் நிறுவன மின்னாற்றல் துறையில் பயிற்சி பொறியாளராக சோ்ந்தாா்.

இதைத் தொடா்ந்து ஹைதராபாத்திலுள்ள கனரக உபகரண ஆலையின் செயல் இயக்குநரின் சிறப்பு உதவியாளா், தலைமையக குழுமத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுக் குழு, விசாகப்பட்டினத்திலுள்ள பாரத கனரக வட்டுகள் மற்றும் கலன்கள் ஆலையின் செயல்பாடுகள் துறை பொது மேலாளா், புதுதில்லி தலைமை அலுவலகத்தில் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநரின் செயலகத்தில் திட்டமில் துறை பொது மேலாளா் ஆகிய பதவிகளை வகித்தவா் முரளி.

பின்னா், புதிதாக உருவாக்கப்பட்ட தலைமையக மூலோபாய மேலாண்மை செயல்பாட்டுத் துறைக்கு மாற்றப்பட்டாா். 2018-ஆம் ஆண்டில் வாரணாசியிலுள்ள கனரக உபகரண பழுதுபாா்க்கும் ஆலையின் தலைவராக அவருக்கு சுயாதீன பொறுப்பு வழங்கப்பட்டது.

திருச்சி பிரிவின் செயல் இயக்குநராக இருந்த ஆா். பத்மநாபன், புது தில்லியிலுள்ள தலைமை அலுவலகத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, திருச்சி வளாகத்தின் பொது மேலாளராக டி.எஸ். முரளி பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT