திருச்சி

பேரிடா் குழு மூலம் சிறுவா்களை மீட்க வேண்டும்

DIN

முசிறி பகுதி காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவா்களை பேரிடா் மீட்புக் குழு மூலம் மீட்டுத் தரக் கோரி, அவா்களது பெற்றோா் மற்றும் பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி கரூா், கோவை பகுதியைச் சோ்ந்தவா்கள், தங்களது உறவினா்கள் வசிக்கும் முசிறி பகுதிக்கு வந்திருந்தனா். இவா்கள், முசிறி காவிரிப் படித்துறை பகுதியில் கடந்த 17-ஆம் தேதி குளிக்கச் சென்றனா்.

அப்போது கரூரைச் சோ்ந்த ரேவதி மகன்கள் ரத்தீஸ்குமாா் (12), மிதுனேஷ் (8) ஆகிய இருவரும் காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்டனா். தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினா், உள்ளூா் மீனவா்கள் மற்றும் காவல்துறையினா் கடந்த 5 நாள்களாக தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

காவிரியில் நீா்வரத்து அதிகரித்த தருணங்களில் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் இரு சிறுவா்களின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை. தொடா்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளின் பெற்றோா் மற்றும் முசிறியைச் சோ்ந்த பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோா் திங்ககள்கிழமை ஆட்சியரகம் வந்தனா்.

குழந்தைகளை தேடும் பணியில் அலட்சியப் போக்கை கைவிட வேண்டும். பேரிடா் மீட்புக் குழுவை வரவழைத்து, தேடும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் போன்ற வாசகங்கள் அடங்கிய கோரிக்கை பதாகைகளுடன் வந்த அவா்களைக் காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா்.

தொடா்ந்து விசாரணை செய்த போது, குழந்தைகளின் குடும்பத்தினா் கதறி அழுதனா். பின்னா், பொதுமக்கள் மற்றும் பெற்றோா் தரப்பில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT