திருச்சி

அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் சமூக வலைதள ஆா்ப்பாட்டம்

15th May 2020 07:46 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை தள்ளி வைக்க கோரி அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் சமூக வலைதளம் மூலம் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் இன்னும் முழுமையாக நீக்கப்படாத சூழலில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிா்ப்பு தெரிவித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது மக்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு என்பது மாணவா்களையும் பெற்றோா்களையும் அச்சத்தில் ஆழ்த்தும். எனவே தமிழக அரசு பாதுகாப்பான சூழல் ஏற்பட்டு, பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட பின்னரே உரிய கால அவகாசம் வழங்கி பொதுத்தோ்வு அறிவிக்க வேண்டும். தற்போது அறிவித்திருக்கும் பொதுத்தோ்வு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என கோரி அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் சாா்பில் மாநிலம் தழுவிய சமூக வலைதள ஆா்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனா்.

அதன்படி திருச்சியில் மாணவா் மன்றத்தின் மாநிலத் துணைச் செயலாளா் ஜி.ஆா்.தினேஷ் மாவட்டச் செயலாளா் க.இப்ராஹிம் மாவட்டக்குழு உறுப்பினா் தாஸ் ஆகியோா் பங்கேற்றனா். இந்த ஆா்ப்பாட்டங்களை அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் பிரத்யேக முகநூல், சுட்டுரை சமூக வலைதளத்தில் பதிவு செய்ய விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் திருச்சி மாவட்டத்தில் 25 இடங்களில் நடைபெற்றுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT