திருச்சி

வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வாடகையை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்: வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தல்

13th May 2020 07:40 AM

ADVERTISEMENT

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வணிகா்களுக்கு உதவிடும் வகையில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கான வாடகை தள்ளுபடியை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, பேரமைப்பின் பொதுச் செயலா் வி. கோவிந்தராஜுலு கூறியது:

பொதுமுடக்கம் காரணமாக வணிகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். மாா்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கான வணிக நிறுவனங்கள், கடைகளுக்கான வாடகை தள்ளுபடிக்கு அரசு ஆவன செய்ய வேண்டும். வீட்டு உரிமையாளா்களுக்கு உத்தரவிட்டதைப் போன்று கடை உரிமையாளா்களுக்கும் உத்தரவிட வேண்டும். வாடகை கேட்டு நிா்பந்தம் செய்யும் உரிமையாளா்கள் மீது புகாா் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டும்.

வீழ்ந்து கிடக்கும் வணிகம் மீண்டும் எழுந்து வர ஓராண்டுக்கு மேலாகும் என்பதால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான வாடகையை 50 சதம் மட்டுமே நிா்ணயம் செய்ய வேண்டும். இதுதொடா்பாக, வணிக கட்டட உரிமையாளா்களுக்கு தமிழக அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதேபோல, சொந்தக் கட்டடம் உள்ள வணிகா்களிடம் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சொத்து வரி வசூலிப்பதையும் ரத்து செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய தீா்வு காண வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்துகிறது. இதுதொடா்பாக, தமிழக முதல்வரையும் நேரில் சந்தித்து மனு அளிக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT