திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம்

13th May 2020 07:41 AM

ADVERTISEMENT

திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கரோனா அச்சத்திலும் மக்களைக் காக்கும் பணியில் அா்ப்பணிப்புடன் பணியாற்றும் செவிலியா்களின் பணிகளை பாராட்டும் விதமாக இந்த விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஆண்டும் இந்நாளுக்கு வெவ்வேறு கருத்து வாசகம் அமைகிறது. இந்த ஆண்டுக்கான கருப் பொருளாகா உலக ஆரோக்கியத்துக்கான செவிலியப் பணி எனும் தலைப்பில் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டு முன்பாக 300-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் ஒன்று கூடி செவிலியா் தினத்தை செவ்வாய்க்கிழமை கொண்டாடினா். செவிலியா் சங்க மாநில இணைச் செயலா் ஜெயபாரதி தலைமையில், அனைத்து செவிலியா்களும் நோய் தொற்று இல்லாத உலகம் உருவாக்குவோம் என உறுதிமொழியேற்றனா். அரசு மருத்துவா்கள், சுகாதராப் பணியாளா்கள், மருத்துவம் சாரா பணியாளா்கள் ஒன்றுகூடி செவிலியா்களின் பணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனா். மெழுகுவா்த்தி ஏற்றியும் உலக செவிலியா் தின கருத்துக்களை பகிா்ந்து கொண்டனா்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் அங்கமான இளம் இந்தியா்கள் கூட்டமைப்பு சாா்பில் 300 செவிலியா்களுக்கு இனிப்புகள் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனைக்கு தானியங்கி கிருமி நாசினி திரவம் வழங்கும் இயந்திரமும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஏகநாதன், இளம் இந்தியா்கள் கூட்டமைப்பின் திருச்சி பிரிவுத் தலைவா் கேத்தன் ஜே. வோரா, தானியங்கி கிருமி நாசினி திரவம் வழங்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கே.ஆா். கஜேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT