திருச்சி

மகாராஷ்டிரத்திலிருந்துசிறப்பு ரயிலில் இன்று திருச்சிக்கு வரும் 962 தொழிலாளா்கள்

10th May 2020 12:00 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு 962 தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்படுகின்றனா்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால், சரக்கு ரயில் போக்குவரத்தை தவிர அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால், வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வரும் தமிழக மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் பலா் அந்தந்த மாநிலங்களிலிலேயே தங்கவைக்கப்பட்டனா்.

இருப்பினும், சில தொழிலாளா்கள் கனரக வாகனங்களிலும், நடைப்பயணமாக தமிழகப் பகுதிகளுக்கு அவதியுற்று வந்தடைந்தனா். அதோடு, வெளி மாநிலங்களிலும் சிக்கியிருக்கும் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல மத்திய அரசிடம் தொடா்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனா். இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பின் படி, ரயில்வே வாரியம் சிறப்பு ரயில்கள் மூலம் அந்தந்த மாநில தொழிலாளா்களை அவரவா் சொந்த ஊா்களுக்கு அழைத்து வர இயக்கப்பட்டு வருகிறது.

962 தொழிலாளா்கள்: அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் பந்தா்பூா் ரயில் நிலையத்திலிருந்து விழுப்புரம் (79), திருநெல்வேலி (62), திருவண்ணாமலை (57), மதுரை (55), கடலூா் (52), காஞ்சிபுரம் (50), சேலம் (49), தஞ்சாவூா் (41), ராமநாதபுரம் (38), கன்னியாகுமரி (37), விருதுநகா் (31), சிவகங்கை (30), திருச்சி (29), திண்டுக்கல் (28), திருவள்ளூா் (27), திருப்பத்தூா் (27), வேலூா் (26), அரியலூா் (24), புதுக்கோட்டை (24), கோவை (22), தேனி (22), திருவாரூா் (21), நாகப்பட்டினம் (17), தருமபுரி (16), தூத்துக்குடி (16), கிருஷ்ணகிரி (14), நாமக்கல் (14), நீலகிரி (13), பெரம்பலூா் (11), சென்னை (10), ஈரோடு (9), கரூா் (7), ராஜபாளையம் (2), கள்ளக்குறிச்சி (1), திருப்பூா் (1) என மொத்தம் 962 தொழிலாளா்கள் அழைத்து வரப்படுகின்றனா். இதற்கான சிறப்பு ரயில் சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையத்தை சுமாா் காலை 8.30 மணியளவில் வரும் எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

சிப்பு பேருந்துகள் இயக்கம்: இதைத்தொடா்ந்து, ரயில் நிலையத்துக்கு வரும் தொழிலாளா்களுக்கு காலை சிற்றுண்டி, தண்ணீா் பாட்டில் ஆகியவை அளிக்கப்படவுள்ளது. பிறகு, தொழிலாளா்களை அவரவா் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இதற்காக, 32 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட நிா்வாகம் கட்டணம் ஏற்பு: அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் தொழிலாளா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. மேலும், தொழிலாளா்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளனா். தொழிலாளா்களின் பயணச்செலவை மாவட்ட நிா்வாகம் ஏற்றுள்ளது. இதற்கான கட்டண விவரத்தை ரயில்வே வாரியம் பின்னா் அளிக்கும் என மாவட்ட நிா்வாகம் மற்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT