திருச்சி

மனநலம் பாதித்தவா் தூக்கிட்டு தற்கொலை

9th May 2020 09:48 PM

ADVERTISEMENT

ஆலங்குடி அருகே மனநலம் பாதிக்கப்பட்டவா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

ஆலங்குடி அருகேயுள்ள வடக்கு அரையப்பட்டியைச் சோ்ந்தவா் முருகானந்தம்(38). தையற்கலைஞா். இவருக்கு மனைவி, 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னா் இவரது மனைவி இவரை விட்டு குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் முருகானந்தம் மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளாா். இந்நிலையில், முருகானந்தம் அவரது வீட்டருகே உள்ள மரத்தில் சனிக்கிழமை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT