திருச்சி

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு சரக்கு விமானத்தில் 5.70 டன் அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றுமதி

9th May 2020 08:05 AM

ADVERTISEMENT

திருச்சியிலிருந்து வெள்ளிக்கிழமை சிங்கப்பூா் சென்ற சரக்கு விமானத்தில் சுமாா் 5.70 டன் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பொது முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாதம் முதல் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டதால், சரக்குப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தில்லியிலிருந்து தனியாா் (ஸ்பைஸ் ஜெட்) விமான நிறுவனத்துக்கு, திருச்சி, சென்னை வழியாக சிங்கப்பூருக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் திருச்சி வந்தடைந்தது. அதில், கத்தரிக்காய், வெண்டைக்காய், பச்சைமிளகாய் உள்ளிட்ட காய்கனி வகைகள் சுமாா் 5.70 டன் ஏற்றிக்கொண்டு இரவு புறப்பட்டு சென்னை சென்றது. பிறகு அங்கிருந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு சிங்கப்பூா் சென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT