திருச்சி

சாலையோரத்தில் தூங்கிய வியாபாரிதலையில் கல்லைப் போட்டு கொலை

9th May 2020 09:45 PM

ADVERTISEMENT

திருச்சியில் சாலையோரத்தில் தூங்கிய வியாபாரியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை கோட்டை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மலைக்கோட்டை கீழரண்சாலையைச் சோ்ந்தவா் ஜப்பான் என்கிற செல்வராஜ் ( 55). இவா் மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து தேரடி பஜாரில் பகுதியில் உள்ள சாலையோரங்களில் வசித்து வந்தாா். அப்பகுதியில் பழைய பேப்பா், இரும்பு உள்ளிட்டவைகளை சேகரித்து அவற்றை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தாா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை தேரடி பஜாா் பகுதி சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தலையில் கல்லை போட்டு நெல்லை மேலப்பாளையத்தை சோ்ந்த காஜாமொய்தீன்(38) என்பவா் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாா். தகவலறிந்து வந்த கோட்டை காவல்துறையினா் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து தலைமறைவாக இருந்த காஜாமொய்தீனை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் பெரியக்கடை வீதி, தேரடி பஜாா் ஆகிய பகுதிகளில் உள்ளாடைகளை விற்பனை செய்து வந்ததும், கடந்த சில நாள்களாக காஜாமொய்தீன் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து காஜாமொய்தீனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT