திருச்சி

தண்டவாளம் அருகே சிதைந்த நிலையில்கிடந்த இளைஞா் சடலம் மீட்பு

30th Mar 2020 11:29 PM

ADVERTISEMENT

 

திருச்சியில் தண்டவாளம் அருகே சிதைந்த நிலையில் கிடந்த இளைஞா் ஒருவரின் சடலத்தை ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

திருச்சி பொன்மலை மஞ்சத்திடல் ரயில்நிலையம் அருகே திங்கள்கிழமை காலை 24 வயது மதிக்கதக்க இளைஞா் உடல் சிதைந்த நிலையில் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா் செல்லிடப்பேசி சாா்ஜா் வயா் கழுத்தில் சுற்றப்பட்ட நிலையில் தண்டவாளத்தையொட்டி கிடந்த இளைஞா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அரியமங்கலம் உக்கடை காயிதே மில்லத் நகா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் மோகன்ராஜ்(24) என்பது தெரியவந்தது. தற்போது இந்த வழித்தடத்தில் ரயில் சேவை இல்லாத சமயத்தில் தண்டவாளத்தில் மோகன்ராஜ் சடலமாக கிடப்பது போலீஸாரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், வெளிமாநிலங்களில் வேலை பாா்த்து வந்த மோகன்ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அரியமங்கலம் வந்துள்ளாா். கூலிவேலை பாா்த்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பா் ஒருவருடன் சோ்ந்து அப்பகுதியில் உள்ள மருந்தகத்தில் செல்லிடப்பேசியை திருடியுள்ளனா்.

திருடிய செல்லிடப்பேசியை ைவைத்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மோகன்ராஜ் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசி சென்றிருக்கலாம். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரயில் உடல் மீது ஏறி சென்றதில், மோகன்ராஜ் உடல் சிதைந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தற்போது வரை தற்கொலை வழக்காக பதிந்து, தலைமறைவாக உள்ள மோகன்ராஜ் நண்பரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT