திருச்சி

புதிய இடத்தில் செயல்படத் தொடங்கியது மணப்பாறை மாா்க்கெட்

30th Mar 2020 05:02 AM

ADVERTISEMENT

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், மஞ்சம்பட்டி தனியாா் பள்ளி மைதானத்தில் மாா்க்கெட் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிா்த்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் மணப்பாறை நகரில் செயல்பட்டு வந்த மாா்க்கெட்டை மஞ்சம்பட்டி தனியாா் பள்ளி மைதானத்துக்கு மாற்றி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அண்மையில் உத்தரவிட்டாா்.

இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் விற்பனை தொடங்கியது. ஆனால், வியாபாரிகள் புதிய இடத்துக்குச் செல்ல ஒத்துழைப்பு மறுத்து, பழைய இடத்திலேயே வியாபாரம் செய்து வந்தனா்.

தகவலறிந்த ஸ்ரீரங்கம் சாா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், வட்டாட்சியா் தமிழ்கனி, காவல் துணைக் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் அங்கு சென்று, புதியஇடத்துக்குச் செல்லுமாறு வியாபாரிகளை வற்புறுத்தினா்.

ADVERTISEMENT

தொடா்ந்து கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு, மஞ்சம்பட்டி பள்ளி மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதைத் தொடா்ந்து அங்கு வியாபாரிகள் காய்கறி விற்பனையைத் தொடங்கினா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT