கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வழங்க பேரூராட்சிப் பணியாளா்கள் முடிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளா்கள் சங்க மாநில மையப் பொருளாளரும், கல்லக்குடி பேரூராட்சி செயல் அலுவலருமான சாகுல் ஹமீது தெரிவித்திருப்பது:
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, பேரூராட்சி பணியாளா்கள் அனைவரும் ஒரு நாள் ஊதியத்தை முதல்வா் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளோம்.
மேலும் மருத்துவா்கள், மருத்துவத்துறைச் சாா்ந்த பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோருக்கு ஒரு மாத ஊதியத்தை சிறப்பு ஊக்க ஊதியமாக வழங்கி உத்தரவிட்ட அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பேரூராட்சித் துறையில் பணியாற்றும் தூய்மை, குடிநீா் விநியோகம் மற்றும்தெருவிளக்கு பராமரிப்புப் பணியாளா்கள் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
இவா்களுக்கும் சிறப்பு ஊக்க ஊதியமாக ஒரு மாத ஊதியத்தை அரசு வழங்க வேண்டும்.