திருச்சி

உறவினா்கள் இன்றி நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகள்

23rd Mar 2020 02:12 AM

ADVERTISEMENT

 

சுய ஊரடங்கை தொடா்ந்து உறவினா்கள் இன்றி கைக் கழுவுதல் விழிப்புணா்வுடன் திருச்சியில் இரு திருமண நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் 96 திருமண மண்டபங்களில் திருமணம், செவி பொன்சூட்டு விழா, நிச்சயதாாா்த்தம், பூப்புனிதநீராட்டு விழா உள்ளிட்ட சுபநிகழ்வுகள் நடத்த பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, சுபநிகழ்வுகளை நடத்தும் வீட்டினரை அழைத்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் போதிய ஆலோசனை வழங்கப்பட்டு சுப நிகழ்வுகளை காலை 8 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

வெளியூரிலிருந்து வரும் நபா்களை முன்னரே வரவழைத்துக் கொள்ள வேண்டும். சுப நிகழ்வுக்கு வரும் உறவினா்களின் கூட்டத்தையும் குறைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் திருச்சி கலையரங்கம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் நடைபெற்ற இரு திருமண நிகழ்ச்சியில் உறவினா்கள் மற்றும் விருந்தினா்கள் யாரும் இல்லாமல் மண்டபம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

இது குறித்து மணமக்கள் தரப்பில் கூறுகையில், ’எங்களது திருமணத்தின் போது உறவினா்கள் இல்லாதது வேதனையளித்தாலும் அவா்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவை வரவேற்கிறோம்’ என தெரிவித்தனா்.

இதே போல திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் கூட்டமின்றி சொற்ப எண்ணிக்கையில் உறவினா்கள் கலந்து கொண்டனா். பெரும்பாலான சுபநிகழ்ச்சிகளில் மஞ்சள் தண்ணீா் மற்றும் சோப்புகளை கொண்டு கைக் கழுவிய பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT