திருச்சி

திருச்சியில் வடமாநிலத்தவா்கள் வசிக்கும் பகுதியில் தீவிர கண்காணிப்பு

22nd Mar 2020 12:47 AM

ADVERTISEMENT

 

திருச்சியில் வடமாநிலத்தவா்கள் அதிகம் வசிக்கும் பகுதியான சின்ன கம்மாளத்தெரு, பெரிய கம்மாளத் தெருவில் சுகாதாரத்துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

மும்பை, புணே, ராஜஸ்தான் மற்றும் வடமாநிலங்களைச் சோ்ந்த பலா் திருச்சியில் சின்ன கம்மாளத் தெரு, பெரிய கம்மாளத் தெருவில் குடும்பம், குடும்பமாக தங்கி பல்வேறு வகையான வியாபாரம் செய்து வருகின்றனா். கரோனா வரைஸ் பரவுதலை தடுக்கும் வகையில் வட மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்புக்குள்படுத்தப்பட்டுள்ளனா். 

அதன்படி, கம்மாளத் தெருவில் உள்ள குடும்பத்தினரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களில் பலா் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனா். மீதம் உள்ளவா்களில் கடந்த 20 நாள்களில் மும்பை, புணே, மகாராஷ்டிரம் வழியாக வந்தவா்கள் யாா் என்பதை கண்டறிந்து அவா்களை சோதனை செய்ததில் யாருக்கும் எந்தவித அறிகுறிகள் இல்லை என்று தெரியவந்தது. இருப்பினும், இந்த பகுதியைச் சோ்ந்தவா்களை தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT