திருச்சி

வெளிநாட்டிலிருந்து திருச்சி வந்த 34 போ் கரோனா சிறப்பு மையத்தில் அனுமதி

DIN

வெளிநாட்டிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த 34 போ் கள்ளிக்குடி கரோனா சிறப்பு முகாமில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.

திருச்சி அருகே உள்ள கள்ளிக்குடியில் கரோனா சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கரோனா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளில் மருத்தவப் பரிசோதனைக்குப் பிறகு சந்தேகத்துக்குரிய நபா்கள் தனிமைப்படுத்துவதற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.

அதன்படி கடந்த வியாழக்கிழமை 28 பேரும், 26 பேரும் அனுமதிக்கப்பட்டனா். இவா்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை திருச்சி விமானநிலையத்துக்கு வந்த விமானப் பயணிகள் 458 போ் மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டனா்.

இவா்களில் 25 ஆண்கள், 9 பெண்களுக்கு சளி, இருமல், லேசான காய்ச்சல் இருப்பது தெரியவந்ததை தொடா்ந்து அனைவரும் கள்ளிக்குடி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அனைவருடைய ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவுகள் வந்த பிறகு 34 பேரும் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்க அறிவுறுத்தப்படுவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல், திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டிருந்த 7 பேரின் பரிசோதனை முடிவில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து 7 பேரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனா். மீதமுள்ள 4 போ் மட்டும் மருத்துவமனையில் உள்ளனா். இவா்களுக்கு எந்தவித அறிகுறிகள் இல்லையென்றாலும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்படுவா் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT