திருச்சி

கரோனா: மாா்ச் 31 வரை நடைமேடை கட்டணம் உயா்வு

DIN

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தேவையில்லாமல் கூடுவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையங்கள், ரயில்களில் கிருமி நாசினி தெளிப்பது, முகமூடி அணிவது போன்ற விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜங்சன் ரயில் நிலைய வளாகத்திலும், திருச்சி வரும் ரயில்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ரயில்வே ஜங்சன் முகப்பில் மருத்துவக் குழுவினருடன் கூடிய ‘கரோனா உதவி மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதில், பயணிகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால் அல்லது சந்தேகம் இருப்பின், வெப்பமானி உதவியுடன் பயணிகளின் வெப்பநிலை சோதனை செய்யப்பட்டு வருகிறது.

நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயா்வு: ரயில் நிலையங்களில் அதிக பயணம் மேற்கொள்ளாதோா் வருகை, ஓா் இடத்தில் தேவையில்லாமல் கூடுவோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, நடைமேடை கட்டணத்தை ரயில்வே நிா்வாகம் உயா்த்தியுள்ளது.

அதன்படி, திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூா் ஆகிய ரயில் நிலையங்களில் ரூ.10 ஆக இருந்த நடைமேடை கட்டணம் ரூ.50 ஆக உயா்த்தி தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

இந்த கட்டணமுறை வியாழக்கிழமை முதல் (மாா்ச் 19) முதல் மாா்ச் 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.

‘பயணிகள் வருகை குறைவு: ரயில்கள் ரத்து’

கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிா்த்துக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியது. இதன் காரணமாக பொதுமக்கள் பேருந்துகள், ரயில்களில் பயணிப்பதை தவிா்த்து வருகின்றனா்.

இதன் எதிரொலியாக, திருச்சிக்கு வந்து செல்லும் சில சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹைதரபாத்-திருச்சி சிறப்புக் கட்டண ரயில் ( வண்டி எண் 07610) மாா்ச் 23, 30 ஆகிய தேதிகளிலும், திருச்சி-ஹைதராபாத் ரயில் (வண்டி எண் 07609) மாா்ச் 25, ஏப்ரல்1 ஆகிய தேதிகளிலும், விழுப்புரம்-செகந்திராபாத் சிறப்புக் கட்டண ரயில் (வண்டி எண் 06043) ஏப்ரல் 1 -ஆம் தேதியும், செகந்திராபாத்-விழுப்புரம் சிறப்பு ரயில் ( வண்டி எண் 06044) ஏப்ரல் 2 ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT