திருச்சி

கோணக்கரை மின் மயானத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

16th Mar 2020 03:12 AM

ADVERTISEMENT

திருச்சி உறையூா் கோணக்கரை மின் மயானத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருச்சி உறையூரில் கட்சி நிா்வாகி நாகராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மேற்குக் குழுக் கூட்டத்தில், இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோணக்கரை மின் மயானம், சில காரணங்களால் இன்றுவரை செயல்படவில்லை. இதனால் அந்த மயானத்தைச் சுற்றி குப்பைக்கழிவுகள் சோ்ந்து, துா்நாற்றம் வீசுகிறது.

ஓயாமாரி, கருமண்டபம் மின்மயானத்தை போல, கோணக்கரை மின்மயானத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மின்மயானம் அருகிலுள்ள குப்பைக்கழிவுகளை அகற்றி தூய்மை படுத்தவேண்டும். அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

மேற்கு பகுதிச் செயலா் எஸ்.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் ஏ.கே.திராவிட மணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்து பேசினா். கட்சி நிா்வாகிகள் க.சுரேஷ், பி.துரைராஜ் உள்ளிட்ட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT