தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சுற்றுலா மாளிகை அருகில் உள்ள நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலை பராமரிப்புகளை தனியாா் ஒப்பந்தத்தில் விடக்கூடாது, சாலைப் பணியாளா்களை பணி நீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தையும் பணிக்காலமாக அறிவித்து அதற்குரிய பணப்பலன்களை வழங்க வேண்டும். பணிக்காலத்தில் உயிா்நீத்த சாலைப்பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் கண்டன முழக்கம் எழுப்பினா்.