திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் 100 கிராம் தங்கம் பறிமுதல்

13th Mar 2020 09:17 AM

ADVERTISEMENT

திருச்சி விமானநிலையத்தில் 100 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

துபையிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வியாழக்கிழமை அதிகாலை திருச்சிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவா்களது உடைமைகளையும் சுங்கத்துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

சோதனையில், தஞ்சையைச் சோ்ந்த சீதாலட்சுமி (36) என்பவா் தனது உடைமைகளுக்குள் மறைத்து 100கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 4.46 லட்சமாகும். அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT