எஸ்.டி பட்டியலில் இருந்து நீக்கி தேவேந்திர வேளாளா் இனம் என்று அரசா ணை வெளியிட வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு அக்கழகத்தின் மாவட்ட தலைவா் குருசந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் வைத்தி மனோகரன், நிா்வாகிகள் அன்புசெல்வன், மதன்குமாா், மகளிரணி வாசுகி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.