திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜீவன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் கொரோனா வைரஸ் நோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வியாழக்கிழமை சைக்கிள் பேரணி நடத்தினா். பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலை பகுதியிலிருந்து நகராட்சி சுகாதார ஆய்வாளா் முரளி மற்றும் கல்லூரி முதல்வா் ஹரிபாஸ்கா் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைக்கப்பட்ட சைக்கிள் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பின் மீண்டும் பெரியாா் சிலை திடலில் நிறைவுற்றது. நிகழ்ச்சியில் நகராட்சி தூய்மைப் பணி பரப்புரையாளா் டைசன், கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் என பலா் கலந்துகொண்டனா்.