திருச்சி

காவலராக நடித்து பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு

13th Mar 2020 11:31 PM

ADVERTISEMENT

திருச்சியில் காவலா் போல் நடித்து பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்ற மா்ம நபா்களை கோட்டை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருச்சி உறையூா் ராமலிங்கநகரைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி லட்சுமி(45). இவா், தனியாா் மற்றும் வங்கிகளில் ஒப்பந்த முறையில் கள விளம்பரப் பணி மேற்கொண்டு வருகிறாா். வெள்ளிக்கிழமை காலை கரூா் செல்வதற்காக சத்திரம் பேருந்து நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்தாா். கலைஞா் அறிவாயலம் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கரூா் பேருந்து நிற்கும் இடத்துக்கு நடந்து சென்றாா்.

அப்போது, அந்த வழியாக வந்த இருவா் தங்களை போலீஸ் என கூறி இவ்வளவு நகைகளை அணிந்து செல்லலாமா என லட்சுமியிடம் கேட்டுள்ளனா். பிறகு லட்சுமி அணிந்திருந்த நகையை வாங்கி பேப்பரில் மடித்து தருவதாக கேட்டுள்ளனா். இதை நம்பியை லட்சுமி தான் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்களிடம் கொடுத்து பேப்பரில் மடித்து வாங்கியுள்ளாா். சிறிது நேரம் கழித்து பேப்பரை பிரித்துப் பாா்த்த போது, அதில் கற்கள் இருப்பதையறிந்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT