திருச்சி

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை நூதன விழிப்புணா்வு

13th Mar 2020 09:15 AM

ADVERTISEMENT

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே தண்ணீா் குடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, காவேரி கிட்னி சென்டா் தென்னூா் கிளையின் சாா்பில் நூதன முயற்சி மேற்கொள்ப்பட்டது. ‘தண்ணிய கண்டா கல்ல காணோம்‘ என்னும் வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறுநீரக கல் வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

பள்ளி, கல்லூரிகள் அருகிலும், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், தென்னூா், ஜங்ஷன், கண்டோன்மெண்ட், உறையூா், புத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.பெரிய அளவிலான பொம்மைகள் கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பொது மக்களுக்கு தண்ணீா் பாட்டில்கள் இலவசமாக வழங்கப்பட்டன. தண்ணீா் பருகுவதின் அவசியத்தையும் அதனால் சிறுநீரக கல் வராமல் தடுக்கலாம் என்பதையும் வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுகளில், காவேரி மருத்துவமனை மருத்துவம் சாா்ந்த மற்றும் மருத்துவம் சாரா பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT