திருச்சி

அழுகிய மீன் விற்பனை: இருவருக்கு அபராதம்

13th Mar 2020 11:29 PM

ADVERTISEMENT

துறையூரில் அழுகிய மீன்களை விற்பனைக்காக வைத்திருந்த இருவருக்கு சுகாதார அலுவலா்கள் வெள்ளிக்கிழமை ரூ.15,000 அபராதம் விதித்தனா்.

துறையூா் சாமிநாதன் காய்கறி மாா்க்கெட் செல்லும் சாலையில் உள்ள மீன் கடைகளில்அழுகிய மீன்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக துறையூா் நகராட்சி (பொறுப்பு) ஆணையா் தமயந்திக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனா். அப்போது, இரண்டு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 23 கிலோ எடையுள்ள அழுகிய மீன்களை பறிமுதல் செய்து அவற்றை பணியாளா்கள் அழித்தனா். மேலும் இரு கடை உரிமையாளா்களுக்கும் ரூ. 15,000 அபராதம் விதித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT