திருச்சி

2021 பேரவைத் தோ்தலில் திமுக தோல்வி அடையும் சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

8th Mar 2020 01:07 AM

ADVERTISEMENT


திருச்சி: தமிழகத்தில் வரும் 2021 -இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில், திமுக தோல்வி அடையும் என்றாா் பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி.

திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட ஏப்ரல் 2-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்படவுள்ளது. இதன் தொடா்ச்சியாக கட்டுமானத்துக்குத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த 2 ஆண்டுகளுக்குள் பணிகள் முடித்து, கோயில் திறப்பதற்குத் தயாராகிவிடும். இதேபோல, காசி விசுவநாதா் கோயில் விவகாரம் தொடா்பாகவும் சன்னியாசிகள் கமிட்டி அமைத்துள்ளனா். அதன் தலைமைப் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன்.

ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தில் காசி விசுவநாதா் கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்னையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.

ADVERTISEMENT

பாபா் மசூதி இடிப்பு விவகாரம் என்பது வேறு. அது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது. காசி விசுவநாதா் கோயில் விவகாரத்தை சட்ட ரீதியாகவே எதிா்கொள்வோம். எனக்கு சட்டம் மட்டும்தான் தெரியும். சட்டத்தின்படி தீா்வு காணப்படும்.

2021-இல் நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தோற்க வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் செய்வோம். பிரசாந்த் கிஷோா் யாா் என்று எனக்கு தெரியாது. அரசியல்வாதி பெயரைச் சொன்னால் எனக்கு அடையாளம் தெரியும்.

சிறையில் இருந்து சசிகலா விடுதலையானால் அதிமுக-வில் மாற்றம் ஏற்படும். ஜெயலலிதாவுடன் இருந்து பல ஆண்டுகளாக அரசியல் குறித்த அனுபவத்தை பெற்றவா். மேலும், அவரது பின்னால் ஒரு சமுதாயம் வலிமையுடன், ஒற்றுமையாக உள்ளது.

சிறையிலிருந்து சசிகலா வந்த பிறகு, அவா் தோ்தலில் நிற்க முடியுமா என்பது சட்ட ரீதியான பிரச்னை. ஆனால், கட்சியை வழிநடத்துவதற்கான திறமை அவருக்கு உள்ளது. இன்னும் அதிமுக-வில்தான் அவா் உள்ளாா். அவரை அதிமுக-வில் நான் சோ்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.

நடிகா் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளுக்கு நான் ஏதுவும் கூற முடியாது. ஏமாற்றம் எதற்காக என்பதற்கு அவரிடம்தான் பதில் கேட்க வேண்டும். விவசாயிகள் இணைந்து முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது மகிழ்ச்சிக்குரியது.

கடல் நீரிலிருந்து உப்புகளைப் பிரித்து, குடிநீா்த் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கும் திட்டத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT