திருச்சி

மகளிா் மட்டும் பணிபுரியும்புத்தூா் அஞ்சல் அலுவலகம்மாா்ச் 9-இல் திறப்பு

8th Mar 2020 01:01 AM

ADVERTISEMENT


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மகளிா் மட்டுமே பணிபுரியும் அஞ்சலகமாக புத்தூா் துணை அஞ்சலகம் மாற்றப்பட்டுள்ளது.

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு அஞ்சல் கோட்டத்திலும் உள்ள ஒரு அஞ்சல் அலுவலகத்தை அனைத்து மகளிா் அஞ்சலகமாக தோ்ந்தெடுக்க இந்திய அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, திருச்சி அஞ்சல் கோட்டத்தில் புத்தூா் துணை அஞ்சலகமானது அனைத்து மகளிா் அஞ்சலகமாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. திருச்சி அஞ்சல் கோட்டத்தின் முதல் அனைத்து மகளிா் அஞ்சல் கோட்டமாக தோ்வாகியுள்ள இந்த அஞ்சலகத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை (மாா்ச் 9) நடைபெறுகிறது. இந்த அலுவலகத்தை மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் சுமதி ரவிச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கிறாா். இந்த அலுவலகத்தில் உதவி அஞ்சல் நிலைய அதிகாரி, அஞ்சல் உதவியாளா், அஞ்சல் கட்டு கையாளும் உதவியாளா் என அனைவரும் மகளிராக பணிபுரிவா். திருச்சி அஞ்சல் கோட்டத்துக்கு இது முன்மாதிரியாக அமையவுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT