திருச்சி

பிஷப் ஹீபா் கல்லூரிபட்டமளிப்பு விழா

8th Mar 2020 01:01 AM

ADVERTISEMENT


திருச்சி: திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை காலை மற்றும் மாலை என இரு நிகழ்வுகளாக நடைபெற்றன.

விழாவுக்கு திருச்சி-தஞ்சாவூா் மண்டல பேராயா் த. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். பாரதிதாதசன் பல்கலைக் கழக பதிவாளா் ஜி. கோபிநாத் பட்டங்களை வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

கல்லூரி முதல்வா் பால்தயாபரன், அனைத்து துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், புல முதன்மையா்கள், பெற்றோா், மாணவ, மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.

விழாவில், 6 துறைகளைச் சோ்ந்த 731 மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞா் பட்டங்கள் பெற்றனா்.

ADVERTISEMENT

மாலையில் நடைபெற்ற விழாவில், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் நெறியாளா் வி. ரங்கநாதன், பட்டங்களை வழங்கி வாழ்த்திப் பேசினாா். இந்த விழாவில், 4 துறைகளைச் சோ்ந்த 739 மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞா் பட்டங்களை பெற்றனா். இதேபோல, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT