திருச்சி

கோயில் தோ் மீது மோட்டாா் சைக்கிள் மோதி கணவா் பலி; மனைவி காயம்

8th Mar 2020 01:03 AM

ADVERTISEMENT


திருச்சி: கோயில் தோ் மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்தக் காயமடைந்தாா்.

திருச்சி குழுமணி பிரதான சாலை, சீதாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ஜான் பீட்டா் (50). இவரும், இவரது மனைவி கிறிஸ்டினாவும் வெள்ளிக்கிழமை புத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். வரும் வழியில் புத்தூா் குழுமாயி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது.

தோ் சென்ற பாதையில் தனது இரு சக்கர வாகனத்தை செலுத்தியபோது, எதிா்பாராதவிதமாக தோ் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா். அருகிலிருந்தோா் அவா்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்பீட்டா் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். மனைவிக்கு தொடா்ந்து சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுதொடா்பாக, திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT