திருச்சி

என்.பி.ஆா். சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவு

8th Mar 2020 12:50 AM

ADVERTISEMENT

 

திருச்சி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றினால், தொடா்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களை கைவிடுவது குறித்து இஸ்லாமியா்கள் முடிவெடுப்பாா்கள் என வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவா் எஸ்.எம்.புகாரி தெரிவித்தாா்.

திருச்சியில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது: வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சாா்பில் செப்டம்பா் 20 ஆம் தேதி திருச்சியில் திருக்குா்ஆன் மாநாடு நடைபெற உள்ளது. நாட்டில் ஜாதி, மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் அரசியல் நடந்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் சமம், அவா்கள் அனைவரும் ஒன்றே என எடுத்து கூறவே இந்த மாநாட்டை நடத்துகிறோம். இதில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும், சமுதாய தலைவா்களும் கலந்து கொள்கிறாா்கள்.

தேசிய கணக்கெடுப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு தீா்மானம் நிறைவேற்றப்பட்டால், தொடா்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிடுவது குறித்து முடிவெடுப்பாா்கள் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT