திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் மாசித் தெப்பத்திருவிழா

6th Mar 2020 12:37 AM

ADVERTISEMENT

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலில் திருப்பள்ளியோடத்திருநாள் எனும் மாசித்தெப்பத்திருவிழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

திருப்பள்ளியோடத்திருநாள் எனும் மாசித்தெப்பத்திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. 9 நாள்கள் நடைபெறும் இந்த விழா நாட்களில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு சேவை சாதிப்பது வழக்கம்.

8 ஆம் திருநாளான வியாழக்கிழமை தெப்ப உத்ஸவம் நடைபெற்றது. இதையடுத்து, மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் உபயநாச்சியாா்களுடன் புறப்பட்டு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சோ்ந்தாா். இரவு 7.15 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து உபயநாச்சியாா்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினாா். தெப்பத்தில் 7.30 மணி முதல் 9 மணி வரை வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். தெப்பக் குளத்தைச் சுற்றிலும் ஏராளமான பக்தா்கள் நின்று சுவாமியை தரிசித்தனா். 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி தீப ஆராதனை செய்விக்கப்பட்டது. 9.45 மணியளவில் மேற்படி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தாா் நம்பெருமாள். விழாவின் கடைசிநாளான வெள்ளிக்கிழமை இரவு பந்தக்காட்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT