திருச்சியில் அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற மினிலாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருச்சி- குழுமணி ரோடு பகுதியில் அதிகளவில் மணல் திருடிச் செல்வதாக உறையூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அதிவேகமாக வந்த மினி லாரியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, லாரியில் மணல் திருடி வந்தது தெரியவந்தது.
வாகனத்தில் வந்தவா்களிடம் போலீஸாா் விசாரணை செய்துகொண்டிருந்தபோது ஓட்டுநா் உள்ளிட்ட இருவரும் தப்பி ஓடிவிட்டனா். இதுகுறித்து உறையூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மினி லாரியை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனா்.