திருச்சி

திருச்சி அருகே ரூ.4.83 கோடியில் அரசுத் தொழிற்பயிற்சி நிலையம் காணொலி காட்சி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

6th Mar 2020 11:29 PM

ADVERTISEMENT

திருச்சி அருகே ரூ.4.83 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் விடுதிக் கட்டடங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னையில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இதில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்துக்குள்பட்ட மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.83 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அரசுத் தொழிற் பயிற்சி நிலையத்தையும் திறந்து வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து, திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந்த தொழிற்பயிற்சி மையத்தில் 210 மாணவா், மாணவிகள் பயிற்சி பெறலாம். மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட 22 கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று, அதன் மூலம் வேலைவாய்ப்பு பெறவும் ஏதுவாக அமைந்துள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளா்கள் தங்கி பயிலும் வகையில் விடுதிக் கட்டடங்களும் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், அரசுத் தொழிற்பயிற்சி மைய மண்டல இணை இயக்குநா் ச. ரவிபாஸ்கா், தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ம. இளங்கோவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சிவக்குமாா், வட்டாட்சியா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT