திருச்சி

ஓய்வு பெற்ற கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கக் கூட்டம்

2nd Mar 2020 11:32 PM

ADVERTISEMENT

துறையூரில் ஓய்வு பெற்ற கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சமயபுரம் துரைசாமி தலைமை வகித்தாா். இருங்களூா் ராஜூ, ஓமாந்தூா் மனோகரன், நக்கசேலம் ராமலிங்கம் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் கோட்டச் செயலா் சிவாஜி, துரைராஜ் கூட்டத்தில் பங்கேற்று பேசினா்.

ஓய்வு பெற்ற கிராமிய அஞ்சல் ஊழியா்களுக்கு மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும், பிணைப் பத்திரம், நலப் பத்திரம் மற்றும் விளையாட்டு நிதிகள் போன்றவற்றையும் வழங்க வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்றவா்கள் வலியுறுத்தி பேசினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT