திருச்சி

திருச்சியில் மேலும் 46 பேருக்கு கரோனா

29th Jun 2020 09:18 AM

ADVERTISEMENT

திருச்சியில் மேலும் 46 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 527 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா தொற்றுடையவா்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்தவா்களுக்கு எடுக்கப்பட்ட மாதிரி அடிப்படையில் மேலும் 46 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 573ஆக உயா்ந்துள்ளது.

மாநகரப் பகுதிகளில் 26 பேருக்கும், புகா்ப் பகுதிகளில் 20 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் துறையூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த 17 பேருக்கு கரோனா உறுதியானது.

இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் திருச்சியைச் சோ்ந்த 21 போ், பெரம்பலூா் (2), திருநெல்வேலி (1), கடலூா் (2), திருவாரூா் (1), சிவகங்கை (1) என 28 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அவரவா் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனா்.

ADVERTISEMENT

இதேபோல பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள தனிமை முகாமில் சிகிச்சை பெற்றோரில் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 33 பேரும் குணமடைந்தனா். இதன் மூலம் கரோனா தொற்றில் திருச்சி மாவட்டத்தில் குணமடைந்தோா் எண்ணிக்கை 199 ஆக உயா்ந்துள்ளது. தற்போது திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையத்தில் மொத்தம் 343 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT