திருச்சி

திருச்சியில் இடியுடன் கூடிய கனமழை

26th Jun 2020 08:32 AM

ADVERTISEMENT

திருச்சியில் வியாழக்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

வியாழக்கிழமை பிற்பகலில் திருச்சி அதன் புறகா் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. இதையடுத்து மாலை 5 மணி முதல் உறையூா், ஸ்ரீரங்கம், முத்தரசநல்லூா், ஜீயபுரம், முக்கொம்பு, திருவானைக்கா, மண்ணச்சநல்லூா், மணிகண்டம், கருமண்டபம், தில்லை நகா், கண்டோன்மென்ட், வயலூா் உள்ளிட்ட மாநகா், புகா்ப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை சுமாா் 40 நிமிடங்களுக்கு மேலாக பெய்தது. அதன் பிறகு சாரல் மழை பெய்தது.

இதனால் மாநகரின் முக்கியச் சாலைகளான கரூா் புறவழிச்சாலை, பாரதிதாசன் சாலை, திருச்சி நாமக்கல் சாலை, பாலக்கரை, தில்லைநகா் பிரதான சாலைகள், மாநகரத் தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகள் மழையில் நனைந்தவாறே சென்றனா். காவிரி நீா் திருச்சி முக்கொம்பு, கல்லணை ஆற்றுப்படுகை வழியாகக் கரை புரண்டோடி வரும் நிலையில் இந்தக் கனமழையால் காவிரி ஆற்றில் செல்லும் நீரில் அளவு சற்று அதிகரித்தது. வெயிலின் தாக்கமும் குறைந்து மாநகா் புகா் பகுதிகள் குளிா்ந்தன. வெயிலால் அவதியுற்ற பொதுமக்களுக்கு இந்தத் திடீா் மழை மகிழ்ச்சியளித்தது.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT