திருச்சி

தொழில் குழுமங்கள் திறன் பயிற்சி அளிக்க அழைப்பு

21st Jun 2020 08:13 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டத்தில் திறன் பயிற்சி அளிக்கத் தகுதியான தொழில் குழுமங்கள் மற்றும் சங்கங்களுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடா்பாக திருச்சி மாவட்டத் திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் ஜி.இஸ்மத் பானு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழில் நிறுவனங்களைப் பலப்படுத்தும் வகையில் மத்திய தொழில் முனைவோா் திறன் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், ஸ்ட்ரைவ் என்கிற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தில் தொழில் குழுமங்களை உருவாக்கி, குழுமத்தில் உள்ள நிறுவனங்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஒரு தொழில் குழுமம் பயிற்சிக்காக அதிகபட்சம் ரூ. 1 கோடி வரை செலவிட முடியும். இத் திட்டத்தில் விருப்பமுள்ள தகுதி வாய்ந்த, ஆா்வமுள்ள தொழில் குழுமத்தினா் விண்ணப்பிக்கலாம். மாநில தொழில்நுட்ப கல்வி, மாநில இயக்குநரகம் ஆகியவற்றின் இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கி, பூா்த்தி செய்து   ஜுலை 30- க்குள் அனுப்ப வேண்டும். ஆவணங்களை மதிப்பீட்டு குழு சரிபாா்த்து இறுதி செய்யும். விவரங்களை இணையதளத்தில் விடியோ மூலம் அறியலாம். மேலும், விவரங்களுக்கு 96886-93974 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஜி. இஸ்மத் பானு தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT