திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் சமூக இடைவெளியுடன் கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ப. ராணி, மேலாளா் ம. லட்சுமணன் (சமயபுரம் மாரியம்மன் கோயில்) ஆகியோா் முன்னிலையில் தன்னாா்வலா்கள் , கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் எண்ணினா்.
முடிவில் ரூ. 18 லட்சத்து 95 ஆயிரத்து 597 ரொக்கம், 384 கிராம் தங்கம், 510 கிராம் வெள்ளி, 76 அயல்நாட்டு நோட்டுகளும் காணிக்கையாக வந்திருந்தது தெரியவந்தது. இதற்கு முன் இக் கோயிலில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி கடைசியாக கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இத்தகவலை கோயிலின் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தெரிவித்தாா்.