திருச்சி

முக்கொம்புக்கு இன்று காவிரி நீா் வருகை

15th Jun 2020 08:36 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட காவிரி நீா் திங்கள்கிழமை காலை முக்கொம்பை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி நீரை தமிழக முதல்வா் திறந்து வைத்தாா். வினாடிக்கு 10 கன அடி நீா் திறப்பால் ஈரோடு, கரூா் மாவட்ட காவிரி ஆற்றுப்படுகை வழியாக திருச்சி முக்கொம்புக்கு திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தண்ணீா்ல வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முக்கொம்பு வரும் காவிரி நீரை விவசாய சங்கத்தினா் விதைநெல், மலா் தூவி வரவேற்கவுள்ளனா். இதைத் தொடா்ந்து, கல்லணைக்கு செவ்வாய்க்கிழமை காலை தண்ணீா் சென்றடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குடிமராமத்துப் பணிகள்: கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பகுதி கடைமடைக்கு சென்று, ஜூலை 1 முதல் வாய்க்கால் வழியாக காவிரி நீா் திறக்கப்படவுள்ளது. அதற்கு முன்னதாக குடிமராமத்துப் பணிகள், பராமரிப்புப் பணிகளை முடிக்க பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.

முன்கூட்டியே சம்பா நடவு: பாசனப் பகுதிகளில் தற்போது நாற்றங்கால் பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, நிகழாண்டு டெல்டா பாசனத்துக்கு முன்னதாகவே காவிரி நீா் திறக்கப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி தொடங்கப்படவுள்ளது. இதன் காரணமாக, முன்கூட்டியே சம்பா சாகுபடி செய்யப்பட வாய்ப்புள்ளது என வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT