திருச்சி

திருச்சி, மாநகராட்சியில் கடந்த ஏழு நாள்களில் முகக்கவசம் அணியாதோருக்கு  ரூ.64,700 அபராதம் வசூலிப்பு

11th Jun 2020 11:22 AM

ADVERTISEMENT

அரசு விதிமுறைகளை மீறி, முகக்கவசம் அணியாதோருக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் இதுவரை ரூ.64,700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகள்,  கரோனா பரவுதலை  தடுக்கும் வகையில் பொதுமுடக்கத்தை செயல்படுத்துவதுடன், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பொது இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச்சியில்  காவல்துறையினர் மட்டுமின்றி, மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியனும், விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில்  மாநகராட்சி, நகர்நல அலுவலர் ம. யாழினி மேற்பார்வையில், சுகாதார அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்  திருச்சி மாநகராட்சியின் நான்கு கோட்டங்களிலும் பொது இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை மீறுவோருக்கு  அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த ஜூன் 4 ஆம்தேதி முதல் 10 ம்தேதி வரை 7 நாட்களில், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் என 4 கோட்டங்களிலும் மொத்தம் ரூ.64 ஆயிரத்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இன்று காலையும் ஆய்வு மேற்கொண்டு, அபராதம் விதிக்கும் பணிகள் தொடர்ந்துள்ளன. திருச்சி, தில்லை நகர் பகுதியில் மாநகராட்சி குழுவினர் ஆய்வு நடத்தி, முக கவசம் அணியாதவர்களை கண்டரிந்து அவர்களுக்கு அபராதம் விதித்தனர். மக்கள் தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது, அத்தியாவசிய தேவைக்காக வருவோர் அவசியம்  முகக்கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும்  மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

Tags : trichy masks திருச்சி முகக்கவசம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT