திருச்சி

திருச்சி-செங்கல்பட்டு சிறப்பு ரயில் முன்பதிவு தொடக்கம்

11th Jun 2020 08:34 AM

ADVERTISEMENT

திருச்சி-செங்கல்பட்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு புதன்கிழமை தொடங்கியது.

தமிழக அரசின் கோரிக்கைக்கிணங்க கோவை - அரக்கோணம், திருச்சி - செங்கல்பட்டு (02606-காா்டு), திருச்சி-செங்கல்பட்டு (02605-மெயின்) ஆகிய மூன்று சிறப்பு ரயில்கள் ஜூன் 12 ஆம் தேதியிலிருந்து இயக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஜூன் 10 காலை 8 மணி முதல் தொடங்கியது. ஐஆா்சிடிசி ஆன்லைன், திருச்சி, தஞ்சாவூா், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு பயணிகள் வந்து ஓரிரு வாரங்களுக்கு முன்பதிவு செய்தனா். பகல் நேரச் சிறப்பு ரயில்களில் 2 இருக்கை குளிா்ச்சாதன பெட்டி இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு குறைவு: சென்னையை அடுத்த செங்கல்பட்டில் கரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் அங்குச் செல்ல பயணிகள் ஆா்வம் காட்டவில்லை. மேலும், மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்பதாலும் முதல் முன்பதிவில் குறைவான பயணிகளே முன்பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT