திருச்சி

சாலை விபத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியா் சாவு

11th Jun 2020 06:41 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள இனாம் சமயபுரம், கரியமாணிக்கம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சு. சிவக்குமாா் (58). இவா் திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் ஃபோா்மேனாக பணியாற்றி வந்தாா். புதன்கிழமை மாலை பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் டிவிஎஸ் டோல்கேட் பகுதிக்கு வந்தபோது, அவ்வழியே சென்ற லாரி மோதி உயிரிழந்தாா். திருச்சி மாநகர போக்குவரத்துப் புலனாய்வு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT