திருச்சி

சாலைப் பணிகளுக்காக கோயிலை இடிக்க எதிா்ப்பு

11th Jun 2020 08:34 AM

ADVERTISEMENT

திருச்சி திருவானைக்கா பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக, சாலையோரக் கோயிலை இடிக்கக் கூடாது என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் மாநில துணைத் தலைவா் எ. மாரி விடுத்துள்ள அறிக்கை:

திருச்சி திருவானைக்கா மாம்பழச் சாலை சிக்னல் அருகே சுமாா், 100 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலை நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அப்புறப்படுத்த முயற்சிப்பதாக தெரிகிறது. மறைந்த சுதந்திரப் போராட்ட வீரா் வ.வே.சு. ஐயரால் திருப்பணி செய்யப்பட்டது இந்த திருக்கோயில்.

அதிகபட்சம் இக்கோயில் அமைந்துள்ள பகுதி சில அடிகள் மட்டுமே. எவ்வளவோ மாற்று வழிகள் இருப்பினும், இந்தச் சிறிய கோயிலை அகற்றித் தான் சாலைப் பணி செய்ய வேண்டும் என முடிவு செய்திருப்பது பெரும்பான்மை இந்துக்களுக்கு வருத்தத்தை உண்டாக்கியுள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இந்தத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT